சனி, 15 நவம்பர், 2008
பூப்பந்து
நீலக் கோளம் சுழல்கிறது
நமது பூம்பந்து அதுவாகும்
கோல நீலம் பச்சையுடன்
கூத்து ஆடிச் சுழல்வதைப்பார்
மரஞ் செடிகொடி உயிரினங்கள்
மனிதர் மாண்புறு செயல்வகைகள்
உரஞ்சேர் நீரவளம் உளவளங்கள்
உள்ளது சொர்க்கம் பூமிதான்
நீரும் நிலமும் ஒளிர்கிறது
நலமே வளிமேகம் வலம்வருது
நீரேன் கீழே வழியவில்லை
நிலமும் சரிந்து சொரியவில்லை?
மரத்தில் காய்க்கும் காய்பழங்கள்
வந்து விழுவது நிலத்திலன்றோ?
உரத்த சிந்தனை புவியீர்ப்பு
ஐசாக் நியூட்டன் கண்டுசொன்னார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)