கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
21
அவன் கண்கள் அறையை நோட்டம் விட்டன. அந்த அறை விசாலமானது. இரண்டு வகுப்பறைகளின் அளவாக இருந்தது. அவனைப் பல கண்கள் அவதானித்தன. அறையின் சுவரோரமாகச் குந்தியும், படுத்தும் கிடந்தார்கள். பத்து வயதுச் சிறுவர்கள் தொடக்கம் எழுபது எண்பது வயது வயோதிபருமாக சுமார் எண்பதுபேர் இருந்தார்கள். அவர்கள் இருப்பதற்கான அடையாளங்கள் தெரியவில்லை. வாய்திறவாது அமைதியாக இருந்தார்கள். ஆனந்தனைக் கண்டதும் அனுதாபமாகப் பார்த்தார்கள்.
இந்த நெருக்கமான இடத்தில் தான் எங்கிருப்பது? அவன் கண்கள் சுற்றிச் சுழன்றன. சுவரோரமாக ஒரு இளைஞன் தலையசைத்துத் தன்பக்கம் வரும்படி சைகை செய்தான். அவன் பக்கத்தில் சென்றான். அவன் எழுந்து அரக்கி இடம் கொடுத்தான். அப்படியே நிலத்தில் இருந்தான். ஆனந்தன் இருந்தபின் அவனும் இருந்து கொண்டான். அறைகளைச் சுற்றி ஆமிக்காரர்கள். உள்ளிருப்பவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் செய்தார்கள். அவர்கள் என்ன கதைக்கிறார்கள் என்று அவதானித்தார்கள். "சோதி..உனக்குத் தெரிந்தவரா“? பக்கத்தில் இருந்தவன் இரகசியமாகக் கேட்டான். தலையசைத்து ‚ஆம்’ என பதிலளித்தான். கதவு திறபட்டால் பயத்தில் நடுங்குவார்கள். கதவு மூடும்வரை அவர்களுக்கு நிம்மதியிருக்காது. இரவானால் பயம் அதிகரிக்கும். கண்களை மூடியபடி குப்புறக் கிடப்பார்கள்.
"சேர்.. நீங்க கல்விப்பணிப்பாளர் ஆனந்தன்தானே“? ஆனந்தனுக்கு ஆச்சரியம். அவன் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவன் தன்னை அறிமுகம் செய்தான். "சேர்... நான்தான்....சோதிநாதன்...செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் ஏ.எல். வகுப்பில படித்தனான். எங்களுக்குப் புவியியல் பாடம் சொல்லித் தந்திருக்கிறீங்க. உங்கட உதவியால எனக்கு புவியியல் பாடத்தில ஏ கிடைச்சிருக்கு. யுனிவேசிற்றிக்கும் தெரிவாகியிருக்கிறன்“ சோதி தன் சேதிகளைச் சொன்னான். ஆனந்தன் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தான். "உங்கட பார்வையின் அர்த்தம் எனக்குப் புரிகிறது. சேர்... நான் எங்கட தோட்டத்தில பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தன். பலபக்கத்தாலயும் ஆமிக்காரர் வந்தாங்க. என்னோட வேலசெய்தவர்களையும் பிடித்து அடித்தார்கள். ஆமிக்காம்புக்கு ஏற்றிச் சென்றார்கள். ஆமிக்காம்பில இரண்டு கிழமை போட்டு சித்திரவதை செய்தார்கள். பிறகு இஞ்ச கொண்டுவந்து போட்டிருக்காங்க. எவ்வளவு கொடுமை சேர். நாங்க இவங்களுக்கு என்ன செய்தம்? ஏன் இந்த ஆக்கினயச் செய்கிறார்கள்“? அவன் சோதி குமுறினான். அவனது கண்களில் கண்ணீர் வற்றியிருந்தது. அவனது உடலெங்கும் அடியின் தழும்புகள். இந்த இளைஞர்கள் வாழவேண்டிய வயதில் எவ்வளவு கனவுக்கோட்டைகளைக் கட்டியிருப்பார்கள். அவற்றை இடிக்கிறார்களே. மனம் நொந்தது.
ஆனந்தனுக்கு சோதியை மட்டுக்கட்ட முடியாதிருந்தது. தாடி மீசை வளர்ந்திருந்தது. அவன் பத்தென்பது இருபது வயது இளைஞனாக இருந்தான். அவனைப் பார்த்து "அப்பா யோகநாதனா“? ஆனந்தன் கேட்டான். " ஓம்“ தலையத்தான். "சேர் பலமாகக் கதையாதீங்க. ஆமிக்குக் கேட்டால் வந்து எல்லாருக்கும் அடிப்பாங்க.“ பயந்தவாறே சொன்னான். சோதியை நினைவு கூர்ந்து பார்த்தான். சோதியின் குடும்பம் வறுமையோடு போராடும் ஏழைக்குடும்பம். பாடசாலையில் படித்தால் வயிறு வாடும். அந்தநேரத்தில் நிலத்தோடு போராடி வேலைசெய்தால் அரைவயிறாவது நிறையும். இப்படியான குடும்பங்கள் செட்டிகுளத்தில் ஏராளம். பள்ளிக்குப் போவதைவிட நிலத்தில் வேலை செய்வது நல்லது என்ற மனப்பாங்கு கொண்ட மக்களிடை பரவியிருந்தது.
இதனை மாற்றியமைக்க ஆனந்தன் பாடுபட்டான். இதனால் அதிபர்களோடு முரண்பாடுகள் தோன்றியதையும் எண்ணிக் கொண்டான். சில கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளுக்கு மேற்பார்வைக்காகப் போவார்கள். பாடசாலைகளில் உள்ள லொக் புத்தகத்தில் தங்கள் வரவை உறுதிப்படுத்துவதற்காகக் கையெழுத்திடுவார்கள். திரும்பிவிடுவார்கள். ஆனந்தன் விதிவிலக்காக இருந்தான். தானாகவே வகுப்புக்களுக்குச் சென்று மாணவர்களோடு பழகிப் பாடங்களைக் கற்பித்தான். வவுனியா மாவட்டப் பாடசாலைகளில் புவியியல் பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் இருந்தார்கள். ஆனால் மாணவர்களது மனதைக் கொள்ளைகொள்ளும் முறையைக் கையாளவில்லை.
அதனால் மாணவர்கள் அதனைவிட்டோடினார்கள். சோதினாதன் பல மாணவர்களோடு ஆனந்தனிடம் வந்தான். மாணவர்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்கினார்கள். ஆனந்தன் புவியியல் ஆசிரியர்களைச் சந்தித்தான். அவர்களுக்குப் பயிற்சி வழங்கி நெறிப்படுத்தினான். அவனும் வகுப்புகளில் கற்பித்தான். பல பெற்றோர்கள் வரவேற்றார்கள். யோகநாதன் அவனை நேரில் பார்த்து நன்றி தெரிவித்தார். அதனை நினைவு கூர்ந்தான். அதன் பலாபலனை நேரில் கண்டு கொண்டான்.
அறையின் மூலையில் பெரிய வாளியிருந்தது. அதற்குள்தான் சிறுநீர் களிக்க வேண்டும். இன்னொரு மூலையில் குடிப்பதற்காக நீர் சேகரித்து வைப்பதற்கான வாளி. ஓவ்வொன்றும் தட்டினால் மூடியிருந்தது. தேவையான போது மூடியைத் திறந்து பாவிக்கலாம். அறையெங்கும் கழிவறை மணம். முதலில் கஸ்டமாகத்தான் இருந்தது. மாலையாகி விட்டது. உள்ளிருப்பவர்கள் எழுந்து ஒருவர்பின் ஒருவராக நின்றனர். சுவரில் பென்சிலினாலும், கரித்துண்டுகளாலும் வரைந்த கடவுள் உருவங்கள். சுண்ணம் பூசிக் காவியடித்த சுவரைத் தட்டினால் உதிரும். நகத்தினால் சுவரைச் சுரண்டி அற்புதமான உருவங்களை அமைத்திருந்தார்கள். சுவரெங்கும் சிவன். பிள்ளையார், முருகன், ஜேசு என சித்திரங்கள் நிறைந்திருந்தன.
கோயில்களின் முகப்புத் தோற்றங்கள் தத்ருபமாகத் தெரிந்தன. அனைவரும் சைவ, கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு சமய வேற்றுமைகளைக் காணவில்லை. திருக்கேதீச்சரத்திலுள்ள கோயில் இருக்கும். மடுமாதாவின் திருக்கோயில் அடுத்திருக்கும். பிள்ளையார் சித்திரம் இருக்கும். பக்கத்தில் சிலுவை இருக்கும். வரிசையில் ஒருவர்பின் ஒருவராக ஒவ்வொரு சித்திரங்களின் முன்னால் நின்று காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, உருகியழும் அந்த மக்களைப் பார்த்து ஆனந்தன் விழிநீர் சிந்தியழுதான். சிவனையும், பிள்ளையார் முருகனையும், தொழுது வணங்கும் சைவசமயத்தவர், மடுமாதவின் திருப்பாதங்களையும், சிலுவையையும் தொட்டுக் கண்ணில் ஒற்றிவணங்குவதையும் கண்டான்.
நான்கு பக்கச்சுவர்களையும் தடவித் தொழுது தங்கள் இடத்துக்கு வந்து சேர ஒரு மணிநேரம் சென்றது. ஏழுமணிக்குக் கதவடியில் காத்திருந்தார்கள். கதவு தட்டப்பட்டுத் திறபட்டது. பெரிய பெட்டி வெளியிருந்து உள்ளே தள்ளப் பட்டது. உணவுப் பொட்டலங்கள் பெட்டியினுள் இருந்தன. ஒரு ஒழுங்குமுறையினை தமக்குள் ஏற்படுத்தியிருந்தார்கள். அந்த நாளுக்குரியவர்கள் உணவுப் பொட்டலங்களைப் பகிர்ந்தார்கள். பலருக்கு அரைவயிறும் நிறையாது. உணவும் போதிய அளவு இல்லை. உண்பதற்கும் மனமில்லை. ஆனந்தனுக்கு சோதி உணவுப் பொட்டலத்தைக் கொடுத்தான். ஆனந்தன் அரைவாசியை மட்டும் எடுத்து விட்டு மிகுதியை சோதியிடம் கொடுத்தான். அவர்கள் பகிர்ந் உண்டார்கள்.
பொது வாளியினுள் கைகழுவினார்கள். முடிந்ததும் சுவரில் சாய்ந்திருப்பதும். அப்படியே நிலத்தில் படுப்பதுமாக இருந்தார்கள். ஆனந்தனுக்கு ஒருவகையில் நம்மதி. இவ்வளவு நாளும் தனியறையிலேயே காலத்தைக் கழித்தான். இன்று பலரோடு இருக்கிறான். ஆளுக்காள் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது. பலருடன் அளவளாவி விடயங்களைச் சேகரித்துக் கொண்டான். இரவு நடுச்சாமம் இருக்கும். ஆனந்தனுக்கு உறக்கம் வரவில்லை. விழித்திருந்தான். கதவு திறபடும் சத்தம் கேட்டது. மெதுவாகப் பார்த்தான். அறைக்குள் மங்கலான மின்குமிழ் எரிந்து கொண்டிருந்தது. இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் கைகளில் 'டோச் லைற்’ இருந்தது. ஒவ்வொருவராகப் பார்த்து வந்தார்கள். ஆனந்தனின் முகத்தில் 'டோச் லைற்’ வெளிச்சம் பாய்ந்தது. அவன் கண்களை இறுக மூடியபடி கிடந்தான்.
"இன்டக்கித்தான் வந்தனான். என்னைத்தான் தேடுறாங்கள்போல. நடக்கிறது நடக்கட்டும்“. அவனது மனம் திக்திக் என்று அடித்துக் கொண்டது. அவர்கள் விலகிப்போவது தெரிந்தது. போன உயிர் மீண்டும் தன்னிடம் வந்த உணர்வு. தன்னோடு வந்த சிலரைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார்கள். இரண்டு பேர்களைத் தட்டி எழுப்பினார்கள். "மே..வறேங்..எலியட்ட ..சத்தங் போடவாணாம்.. தேருணவாத... " இழுத்தெடுத்து வெளியில் கொண்டு போனார்கள். கதவு பூட்டப்பட்டது. அவர்கள் போனதும் எல்லாரும் எழுந்து குந்தியபடியே இருந்தார்கள். அனைவரது கண்களும் பேயறைந்ததுபோல் பிதுங்கிக் கொண்டிருந்தன.
அதிகாலை நான்கு மணியிருக்கும். கதவு திறபடும் சத்தம் கேட்டது. கொண்டு போன இருவரையும் இழுத்து உள்ளே தள்ளினார்கள். கதவு பூட்டப்பட்டது. அவர்கள் "ஐயோ அம்மா“ என அழுது புலம்பினார்கள். வெளியில் இருந்து ஆமிக்காரர் அதட்டினார்கள். அவர்கள் இருவரையும் சூழ்ந்து குந்தியிருந்து தடவிக் கொடுத்தார்கள். அவர்கள் அழுதவண்ணம் கிடந்தார்கள். உடலெங்கும் அடிகாயங்கள். இரத்தக் கசிவுகள். முகமெல்லாம் தடித்து வீங்கியிருந்தது. உதடுகள் வெடித்து இரத்தம் கசிந்து காய்ந்திருந்தது. "இவங்களுக்குப் பாடம் படிப்பிக்கவேணும். எங்களச் சித்திரவதை செய்வதுபோல் நாங்களும் அவங்களச் சித்திரவதை செய்யவேணும“;. ஒருவன் கொதித்தான். கேட்டுக்கொண்டு அசையாது இருந்தான்.
அன்றிரவு ஒருவர் வயிற்றுப்போக்கினால் அவதியுற்றார். ஆனந்தன் நடப்பதை அவதானித்தான். அவரை வாளியினுள் மலங்கழிக்க உதவியதையும், அதற்குள்ளேயே குடிப்பதற்காக வைத்திருக்கும் நீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தியதையும் கண்டு கொண்டான். ஒருவருக்கு ஒருவர் உதவுவதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தான். இவர்கள் வெளியில் இப்படி உதவுவார்களா? மனதினுள் எண்ணிக் கொண்டான். இது ஒரு புதுமையான உலகம்தான். ஒவ்வொருவராக எழுந்து விட்டார்கள். வாளி சிறுநீரால் நிறையத் தொடங்கியது. எழுந்ததும் வரிசையாக ஒருவர்பின் ஒருவராகச் சுவர்களைப் பார்த்துச் சுற்றிக் கும்பிட்டு வந்தார்கள். அவர்களது பிரார்த்தனைகள் இறைவனின் செவிகளில் விழுவதில்லையா? இறைவனுக்குச் செவிகள் இல்லையா? ஒருவனை ஒருவன் வருத்தும்போது அதனைத் தட்டிக் கேட்கப் படைத்தவனால் முடியாதா? ஒரு இனத்தை இன்னுமொரு இனம் அடக்கி சித்திரவதை செய்து ஆளுவதை யார் கேட்பது?
கோழிகள் கூவுவது இல்லை. வவுனியா நகர் சோபையிழந்து கிடந்தது. இராணுவத்தின் அட்டகாசம் தலைவிரித்தாடியது. ஏப்பொழுது யாரைக் கைது செய்வார்கள் என்பது தெரியாது. நகரில் இருந்த சனங்கள் பயத்தின் பிடியில் இருந்தனர். வீடுகளை விட்டு காலை ஒன்பது மணிக்குப்பின்னரே கடைகளுக்கு வருவார்கள். பொருட்களை வாங்குவார்கள். உடனேயே வீடுகளுக்குப் போய்விடுவார்கள். பலர் யாழ்ப்பாணம் சென்றுவிட்டார்கள். வவுனியா மாவட்டத்தில் பிறந்து வாழும் மக்கள் எங்கே போவார்கள்? இரவுவேளைகளை ஓரிடத்தில் கூடி ஒன்றாக இரவைக் கழித்தார்கள். பெரும்பாலும் கிறிஸ்தவக் கோயில்களில்தான் இரவைக் கழிப்பார்கள். விடிந்ததும் வீகளுக்குப் போவார்கள்.
விடிந்து எட்டரை மணியாகியிருந்தது. கதவு திறபட்டது. "அடோவ்...எலியட்ட வறேங்.. வெளியில வாங்கடா“ சிப்பாய்கள் அழைத்தார்கள். வெளியில் வந்தவர்களை இருவர் இருவராக விலங்கிட்டார்கள். முதலில் ஆறு சோடிகளை வெளியில் எடுத்தார்கள். வரிசையில் கழிவறைப்பக்கம் கூட்டிச்சென்று விலங்கைத் திறந்து விட்டார்கள். "இக்மன்ட்ர வறேங் கெதியா வா“ சொன்னார்கள். கழிவறைகளைச் சுற்றிக் காவலிருந்தார்கள்.
கழிவறைகள் அடையாத வாயிலகங்களாகச் சிரித்தன. அதற்குள்ளேயே குழாயில் நீர் வசதியிருந்தது. வாயை அலம்பி, கண்களை நனைத்து, கழிப்புக்கள் செய்து வந்தார்கள். சற்றுச் சுணங்கினால் "மொனவத கறனபாங்“ சொல்லி அடித்தார்கள். முடிந்து வந்ததும் விலங்கிட்டார்கள். பழையபடி அறையினுள் விட்டார்கள். அவர்களின்பின் மற்றவர்கள். அறையினுள் உள்ள கழிவு நிறைந்த வாளிகளைத் தூhக்குவதற்கு "நான் நீ“ என்று போட்டி. அவற்றைக் கொண்டு செல்பவர்களுக்கு விலங்கிடமாட்டார்கள். சற்றுத் தூரத்தில் குழிதோண்டிக் கொட்டவேண்டும். அந்தநேரத்திலாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் பேராசை அவர்களுக்கு. ஆனந்தனின் நேரம் வந்தது. அவனது கையைப்பிடித்து இன்னொருவரது கையோடு விலங்கிடப் பட்டது. கழிவறைக்குப் போனதும் விலங்கைத் திறந்து விட்டார்கள். வாயை அலம்பி கண்களில் தண்ணீரை வாரியடித்து, கழிப்புக்காக முயற்சித்தான். திறந்த மலசலகூடம். பழக்கமில்லை. ஆமிக்காரர் அவசரப்படுத்தினார்கள் வந்து விட்டான். எல்லோரும் கடன்களை முடிந்து வந்தார்கள். பழையபடி கதவு பூட்டப்பட்டது.
தொடரும்
திங்கள், 17 மே, 2010
கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
19
பாடசாலை கலகலத்தது. அதிபர் சின்னத்தம்பி; விட்டுச்சென்ற பணியை அதிபர் ஸ்ரனிஸ்லாஸ் தொட்டு வளமுறச் செய்தார். அந்த ஊர் பழம்பெரும் கிராமம். குளக்கோட்டன் கந்தளாய்க் குளத்தைக் கட்டிப் பலகிராமங்களை அமைத்துக் குடியிருப்புக்களை ஏற்படுத்தி மக்களைக் குடியமர்த்தினான். தம்பைநகரின் கிழக்கெல்லையாகக் கொட்டியாரக்குடாக் கடல் நெளிகிறது. கொட்டியாரக்குடாக் கடலைத் தழுவியணைத்து மகாவலி சங்கமமாகிறது. கங்கைநீர் கோணேசர் பாதங்களைத் தொட்டளைந்து விளையாடும் இடமாகக் கொண்டுள்ளது. தம்பலகாமக்குடாவில் கந்தளாய்க் குளத்தின் வடிச்சல் நீரும், உவர்நீரும், மகாவலியின் நன்நீரும் சங்கமிக்கும். மூன்றும் கலந்துகொள்ளும். அங்கு முத்து விளையக் களம் அமைத்துக் கொடுக்கும்.
சேர,சோழ,பாண்டியரும், பிறநாட்டு மன்னர்களும், வணிகப்பெரு மக்களும் தம்பைநகரின் கப்பல்துறைமுகத்தில் ஒன்று சேருவர். கப்பல் துறைமுகம் பிரபலமாக விளங்கியது. ஈழத்துணவு இங்கிருந்து சென்றது. பாய்மரக்கலங்கள் தரித்து நிற்கும். தேரோடும் வீதிகளும், பல்தேசத்து மக்களும் நிறைந்திருந்தனர். ஒரே கேளிக்கையாக இருக்கும். தம்பலகாமப் பற்று பரந்த பிரதேசமாக விளங்கியது. கிழக்கில் நெய்தலும், மேற்கில் மருதமும், வடக்கில் குறிஞ்சியும், தெற்கில் முல்லையும் கலந்து பரந்து எல்லைகளாக விளங்கின. குளக்கோட்டு மன்னனால் அம்மன் கோயில்கள் கட்டப்பட்டன. இன்று அந்தக்கப்பல்துறைக்குப் பல்வேறு காரணங்களைக் கற்பித்து வரலாறு கூறுகிறார்கள்.
அப்போது சிற்றூர்கள் இல்லை. தம்பலகாமம் கிழக்கு எனும் பெயரினால் அழைக்கப்பட்டது. பல சிற்றூர்கள் இருந்தன. நீரோட்டுமுனை, தாமரைவில், ஆலங்கேணி, சூரன்கல், மணியரசன்குளம், பாண்டியனூற்று, மாகாமம், தீனேரி,கற்சுனை எனக் கிராமங்கள் மகாவலி கங்கைக் கரையோரம் வரை நீண்டு கிடந்தன. இக்கிராமங்களில் அம்மன் கோயில்கள் நிறைந்திருந்தன. அவற்றில் ஒன்று ஆலங்கேணியில் அமைந்திருந்தது. பூசாரிவெட்டை பூசாரிமார்களுக்கு நிவந்தமாகக் கொடுபட்டது. வண்ணத்தொழில் செய்வார்க்கு வண்ணான்வெளி கிராமம் கொடுபட்டது. வயல்களில் மேற்பார்வையில் ஈடுபட்டவர்களுக்கு அடப்பானார்வெட்டைக் கிராமம் நிவந்தமாகக் கொடுக்கப பட்டது. சைவப்பாரம்பரியம் சிறப்புற்று விளங்கியது.
'மாற்றமாம் வையகம்’ என்பது எவ்வளவு உண்மை. இன்று எல்லாம் மாறிவிட்டது. கோயில்கள் எல்லாம் மண்மேடுகளாயின. மாகாமத்தில் தொடங்கிய கொள்ளை நோயால் வாழ்ந்திருந்த தமிழ் மக்கள் பலரைச் சாவு காவு கொண்டது. பலர் வேறு இடங்களை நாடிச் சென்றனர். ஊர்கள் அழிந்தன. மக்கள் நிறைந்திருந்த ஊர்மனைகள் காடுகள் பற்றி விலங்குகள் நிறைந்தன. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வேற்று மக்களும், வேறு சமயங்களும் வந்து புகுந்தன. புதுப்புது ஊர்கள் முளைத்தன. 'பழையன களைதலும், புதியன புகுதலும் வழுவல’ என்பது இன்று வழக்கொழிந்து 'புதியன புகுத்தலும், பழயன கழித்து விரட்டலும்’ என்று ஆகிவிட்டது.
அந்நியர் படையெடுப்பின் பின்னர் யாவும் நிலைகுலைந்து போயின. மக்கள் திசைதெரியாது கால்போன பக்கம் சென்று குடியேறினர். பலசதாப்பதங்களின் பின் படிப்படியாகத் தமது பிரதேசங்களில் குடியிருந்தாலும் அந்நியர் ஆட்சியரின் அதிகாரிகளிடம் இருந்து தமது நிலங்களை பணம் கொடுத்து எழுதி வாங்கினார்கள். பிரித்தானியர்கள் இந்த நடைமுறையைச் செய்தார்கள். குருகுலக் கல்விமுறை படிப்படியாக மாற்றம் பெற்றது. கிறிஸ்தவ மதம் பரவியது. பாதிரிமார் பாடசாலைகளைத் திறந்து கல்விப்பயிர் வளர்த்தார்கள். ஆலங்கேணியிலும், நீரோட்டு முனையிலும் குருகுலமுறைக் கல்வி நடைபெற்றாலும் அது வெற்றியளிக்க வில்லை. பாதிரிமார் ஆலங்கேணிப்பாடசாலையை 1898ல் பொறுப் பெடுத்தார்கள்.
பாடசாலை பலசதாப்தங்களாக நடைபெற்றாலும் வளர்ச்சி யடையவில்லை. எழுச்சியை வேண்டி நின்றது. அதனை நிறைவு செய்யவென்று பல இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனந்தனும் முழமையாகத் தன்னை இணைத்துக் கொண்டான்.
அன்று மாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானத்தில் பயிற்சியளிப்பதில் ஈடுபட்டிருந்தார்கள். நல்ல களைப்பு. ஆறுதலாக வீட்டுக்கு நடந்து போனார்கள். அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. வீட்டில் டேவிட் ஜோசப் மாஸ்ரரோடு ஆனந்தன் வீட்டுக்கு வந்திருந்தார். அப்பா அம்மாவோடு கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் கண்டபோது ஆனந்தன் மனம் சந்தோசத்தால் துள்ளியது. பீற்றர்சனுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. அவனுக்குத் தன் அப்பாவையும், டேவிட்டரையும் கண்டதும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
இரவுப்பொழுது மகிழ்ச்சியாகக் கழிந்தது. ஆனந்தனின் திருமணம் மே மாதம் இருபத்தோராம் திகதி நடத்துவதற்கான பேச்சு நடந்து முடிந்தது. ஜூன் மாதம் பீற்றர்சன் மயூரியின் திருமணத்தையும் நடத்தி முடிக்க முடிவாகிவிட்டது. ஜோசப் மாஸ்ரர் ஒரு புரட்சிகரவாதி. அவருக்கு எம்மதமும் சம்மதமே. முரண்பாடுகளுக்கு மனிதமனங்களே காரணம் என்பதைப் புரிந்து கொண்டவர். ஆனந்தனின் பெற்றோர் எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவித்து விட்டனர். வாழப்போவது நமது பிள்ளைகள்தான். அவர்களது சந்தோசம்தான் முக்கியமானது. ஓவ்வொருவரும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் இந்த உலகத்தில் சொர்க்கத்தைக் காணலாம் என்பது ஆனந்தனின் அப்பா கணபதிப்பிள்ளையரின் வாதம்.
வந்தவேலைகளை முடித்து விட்டு இருவரும் புறப்பட்டனர். திருமணத்தை முடித்துவைப்பதற்கான வேலைகளைப் பார்க்க எல்லாரும் ஒன்றாகிச் செயற்பட்டனர். இவ்வளவு விரைவில் இவையெல்லாம் நடக்குமென்று மார்கிரட் எதிர்பார்க்கவில்லை. கொழும்பில் ஆனந்தனின் குடும்பத்தவர்கள் தங்குவதற்கு வீடு தேவைப்பட்டது. பாத்திமா தங்கள் வீட்டில் சகல வசதிகளையும் செய்து கொடுத்தாள். ஆனந்தன் தங்குவதற்கு லதா தங்கள் வீட்டில் ஒழுங்குகளைச் செய்தாள். மேரிக்காக பாத்திமாவும், லதாவும் தங்கள் குடும்பத்தவரோடு வேண்டிய ஒத்தாகைளைச் செய்து கொடுத்தார்கள். தங்களது உறவினரின் திருமணம்போல் கலந்து கொண்டு பாடுபட்டார்கள். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாட்டைக் காணவில்லை. சைவம், கிறிஸ்த்தவம், பௌத்தம். இஸ்லாம் என்ற பாகுபாட்டைக் காணவில்லை. எல்லோரும் சங்கமித்த காட்சியைக் கணபதிப்பிள்ளை கண்டார்.
இப்படி எல்லா மக்களும் ஒன்றாக இருந்தால் நமது நாடு சொர்க்கமாகும். மனதினிலே எண்ணிச் சந்தோசித்தார். மனம் மகிழ்ந்தது. செபஸ்தியார் எதனை நினைத்தாரோ அதனை ஆனந்தன் நிறைவேற்றி வைத்தான். "மாகிரட் இப்ப என்ன சொல்கிறாய“;. டேவிட் புன்னகையோடு கேட்டார். "எல்லாம் உங்கட தயவுதான்.“; மாகிரட் சிரித்துக் கொண்N;ட கூறினார். "மேரி நமது 'கனவு மெய்ப்பட வேண்டும்’ என்று இறைவனிடம் வேண்டுதல் செய்தோம். இன்று அதனை அவர் நிறைவேற்றியிருக்கிறார். நமது திருமணத்தில் எல்லாச் சமயத்தவரும் ஒன்றாகி நடத்தி வைத்துள்ளார்கள். இறைவன் ஒருவனே. அவனை எந்தப் பெயர்கொண்டும் அழைக்கலாம்“. அவளது காதுகளில் ஓதினான்.
அவளுக்குப் பெருமையாக இருந்தது. மயூரி அடிக்கடி மேரியின் பக்கம் வந்து சீண்டிக் கொண்டிருந்தாள். "மயூரி உங்கட திருட்டுத்தனங்கள நானும் கவனிச்சன். அடுத்தமாதம் வருவீங்கதானே. அப்ப பார்ப்பம். எங்க பீற்றர்சன். அண்ணி சத்தம் போடதீங்க. சிரித்துக் கொண்டே ஓடினாள். மேரி திருகோணமலைக்குப் புறப்பட்டாள். பாத்திமாவும், லதாவும் தேம்பித்தேம்பி அழுதார்கள். "இவ்வளவு காலமும் சேர்ந்தொன்றாய் திரிந்தோம். இப்போது நீங்க ஒருபுறம். நாங்க ஒருபுறம் என்று பிரிஞ்சிட்டம்“. லதா விசும்பினாள். மேரி கண்கலங்கி விம்மினாள். "உங்கட உதவிய மறக்கமாட்டன். அடிக்கடி கொழும்புக்கு வருவன்“;. கூறிப்புறப்பட்டாள்.
ஆனந்தனது இல்வாழ்வு கலகலத்தது. மயூரியின் திருமணத்தையும் நடத்திவைத்தார்கள். மேரி இரண்டு குழந்தைகளைப் பெற்று ஆனந்தனைத் தந்தையாக்கினாள். மேரியை தனது பேறாகவே நினைத்தான். அவனைப் பொறுத்தவரை இல்லறவாழ்வு இனித்தது. பதவியுயர்வு அவனைத் தேடிவந்தது. கல்வி நிர்வாகசேவையின் உயரதிகாரியாக வவுனியாவுக்கு வந்தான்.

வியாழன், 6 மே, 2010
கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல் தொடர்ச்சி
4
கண்களை மெல்ல மூடி இருந்தான். அவன் சிந்தனைக்கு வேலை கொடுப்பது போல் திருவள்ளுவர் முன்னே நின்றார். ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’, என்றொரு வினாவைக் கேட்டுவிட்டு வள்ளுவர் வந்த வழியே சென்று மறைந்துவிட்டார். சிந்தனை விரிந்தது. மூளை துருவித் துருவி ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்தப் பரந்த உலகில் ஒரு பெண்ணைவிடவும் உயர்ந்தது இல்லையா? வேறு ஏதேனும் உண்டா? ஏன் இந்த வினாவைக் கேட்டார்?;.
அவர் கூறிய விடையும் திருக்குறளில் உண்டு. அவரது விடை ‘கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்’;, என்பதாகும். ஆனால் அவரது விடை சரியான விளக்கத்தை உடையதா? இன்றைய நவீன யுகத்தில் வேறுவகையான விளக்கங்கள் உண்டா? ஆனால் அந்த வினாவினுக்கு ஏதோ ஒரு புது வடிவத்தைக் காணவேண்டிக் கேட்டிருக்கலாம். பெண்ணாகப் பிறப்பதற்குப் பெருந்தவம் செயதிருக்க வேண்டும் என்பது கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களது கருத்தாகும்.
மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா. பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப் பாரில் அறங்கள் வளரும் அம்மா.
ஒரு பெண் இந்த உலகின் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணம் ஆகின்றாள். நமது இதிகாச புராண வரலாறுகள் இதற்குச் சான்றுகளாகின்றன. இந்த மண்ணில் அறம் தழைத்தோங்கப் பெண்ணின் தயவு தேவைப் படுகிறது. இல்வாழ்வில்தான் இன்பத்தைக் காணமுடியும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த இன்பம் இருவகைத்து. ஒன்று சிற்றின்பம். அது உடலாலும் உள்ளத்தாலும் பெறுவது. அல்லது அடைவது. இது நிலையில்லாதது. அடுத்தது பேரின்பம். முக்தி நிலைக்கு வித்திடுவது. இவை இரண்டும் ஒரு நல்ல பெண் மூலம்தான் பெறமுடியும். நாட்டில் அறம் ஓங்கவும், அமைதி நிலவவும், நன்மக்களைப் பெற்று நலம்காணவும் பெண்களே பெருந்துணை ஆகின்றார்கள். அதனால்தான் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என வள்ளுவர் கேட்டார் போலும்.
“நித்திரைபோல் தெரியவில்லை. அப்படி என்ன கடும் யோசனை”? மேரிதான் கேட்டாள். ஆனந்தன் அதளபாதாளத்தில் விழுந்தெழும்பிய உணர்வினைப் பெற்றான். மெல்லத் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். “ அப்படி ஒன்றுமில்லை. சும்மா கண்ணை மூடியபடி யோசித்தேன் அவ்வளவுதான்.;.” ஒருவாறு சமாளித்தான். மேரி புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில்தான் எத்தனை கோடி அர்த்தங்கள் புரண்டோடின. அவற்றுள் எதனை அவன் பற்றிக் கொள்வது? ஏதாவது சொல்ல வேண்டும்போல் தோன்றியது. “நீங்கள் ரீச்சரோ”? ஆனந்தன் உளறிவிட்டான்.. “பார்த்தால் அப்படித்தான் தெரிகிறதா”? மேரி தொடர்ந்தாள். “உங்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது.” சமாளித்தான். “ரீச்சராகத்தான் நினைத்தேன். சந்தர்ப்பமும் வந்தது. ஆனால் நான் வேலை செய்வது அம்மம்மாவுக்குப் பிடிக்காது. அதனால் வேலைக்குப் போவதில்லை. வீட்டில்தான் இருக்கிறேன்.” மேரி பதிலளித்தாள்.
“எப்படிப் பொழுது போகிறது”?. ஆனந்தன் தொடர்ந்தான். “ “நமக்காகப் பொழுது ஒருநாளும் காத்திருக்காது. அது தானாகவே போகும். அதன் அசைவில்தான் உலகின் இயக்கம் இருக்கிறது.” ஒரு வேடிக்கைக்காகச் சொன்னாள். பின்னர் அவளே தொடர்ந்தாள். “வீட்டில் எனது பொழுது போக்கு தையல் தைப்பது. அருமையான, பயனுள்ள பொழுது போக்கு. அக்கம் பக்கமுள்ள ஏழைகள் தைப்பதற்கு வழியில்லாது தவிப்பார்கள். தைத்துக் கொடுப்பேன். அதற்கும் அம்மம்மா ஏசுவார்”.? “ஏன்.”?“காசு வாங்கித் தைத்துக் கொடு என்பார். நான் அதற்கு உடன்படுவதில்லை. அதனால்.” மெல்லென மின்னல் வெட்டியது போன்ற பிரமை. அவளது செவ்விதழகள்; அசைந்து மூடிக்கொண்டன. அதனை வெகுவாக இரசித்தான். “அவர் சொல்வதும் ஒருவகையில் சரிதானே”? ஆனந்தன் பதிலிறுத்தான்.
“எது சரி? வசதியுள்ளவர்களிடம் வாங்கலாம். ஆனால் அன்றாடம் காய்சிகளிடம் வாங்குவது சரியா? போடுவதற்கே உடுப்பில்லாத சனங்கள். அவர்களிடம் வாங்கலாமா”? மேரி கேள்வி மூலம் விடையளித்தாள். ஆனந்தன் மேரியின் காருண்ய மனதை வியந்தான். “உங்களுக்குத் தாராள மனது”. புன்னகையூடே பதிலளித்தான். அவர்களது உரையாடலை பெரியவர் ரசித்திருக்க வேண்டும். அவர் குறுக்கிட்டார். “தம்பி மேரி இரக்க சுபாவமுள்ளவள். அவளோட கதைக்க முடியாது. பெரிய மாக்சிஸ்சியவாதி போல் கதைப்பாள்.” ஆனந்தன் பெரியவரை ஆச்சரியமாகப் பார்த்தான். பெரியவர் மாக்சிஸ்யம் பற்றிப் பேசுகிறாரே.
“அப்பா நான் உண்மையைத்தான் சொன்னேன்.” “அதைத்தான் நானும் சொல்லுறன்.” அவர் சிரித்தவாறே சொன்னார். ஆனந்தன் தனக்குள் சிரித்துக் கொண்டான். புகைவண்டியின் இரைச்சல் செவிப்பறைகளை அதிரச் செய்தது. றெயிலின் கூவல் நீண்டொலித்தது. அவர்கள் கதைப்பதைக் காற்றும் இரைச்சலும் இழுத்துச் சென்றன. மேரி காதுகளில் கைகளை வைத்து அழுத்திப் பொத்திக் கொண்டாள். ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். பயணிகள் தம்மை மறந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சநேர அமைதி நிலவியது. மேரியின் பதில்களும், சொல்லும் அழகும் ஆனந்தனை வசீகரித்தன. அவன் தன்னை மறந்து வேறு உலகத்தில் சஞ்சரித்தான்.
இதிகாச புராண வரலாறு போற்றும் பெண்களை நினைவு கூர்ந்தான். தான் வாழும் சமுதாயத்தில் உள்ள பெண்களையும் மேரியோடு இணைத்துப் பார்த்தான். வரலாற்றில் இடம்பெற்ற மொண்டிசோரி அம்மையார், புலோறன்ஸ் நைற்ரிங்கேல், அன்னை திரேசா, சமகாலத்தில் வாழும் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி போன்றோரும் வந்து நின்றனர். இந்த உலகத்தில் உள்ள உன்னதமான அத்தனை பெண்களையும் எண்ணிப்பார்த்தான். தனது சிந்தனையில் அரசியலில் ஈடுபட்ட, அல்லது ஈடுபடும் பெண்கள் பற்றிய பட்டியல் மெல்ல மறைந்து போய் விட்டது. சமூக நலனுக்காக, நலிவுடையோருக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த, அர்ப்பணிக்கும் பெண்களின் பெருந்தன்மையை எண்ணிக் கொண்டான். விழிப்புலனற்ற ஹெலன்கெல்லர், விழிப்புலன் அற்றோருக்காகச் செய்த சேவையை எண்ணிப் பார்த்தான். மொண்டிசோரி அம்மையாரின் குழந்தைகளை நற்குடிகளாக ஆக்க வேண்டிய கல்வித் திட்டத்தை முன்வைத்தமை பற்றியும் சிந்தித்தான்.
உலகப் போரின்போது காயப்பட்ட போர்வீரர்களைக் கண்துஞ்சாது தனது கைகளிலே விளக்கொன்றை ஏந்தி அவர்களது துயர்களைந்த புளோறன்ஸ் நைரிங்கேலின் வரலாற்றையும் எண்ணினான். யாழ்ப்பாணத்தில் போரினால் அனாதைகள் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துச் சேவை செய்யும் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களையும் நினைவு கொண்டான். தமிழ் மக்களுக்காய், அவர்களது உரிமைக்காக உண்ணா நோன்பிருந்து தனது உயிரை விட்ட அன்னை பூபதியையும் கருத்தில் கொண்டான். அன்னை திரேசா கன்னியர் மடத்தில் சேர்ந்து துயருறும் அடிமட்ட ஏழைகளுக்காய் உழைத்ததையும், அவர் மறைந்தபின், அவருக்கு ரோமாபுரியில் வத்திக்கான் நகரில் போப்பாண்டவர் சின்னப்பர் அருளப்பரால் முத்திப்பேறு பட்டத்தை வழங்கி கௌரவித்ததையும் வியந்து ஒப்பு நோக்கினான்.
இவற்றை எல்லாம் தன்மனக் கண்முன் நிறுத்தி ஒரு தேடலில் ஈடுபட்டான். தனது நாட்டில் தனது கண்முன்னே திடமான நல்ல பயனுள்ள செயற்கரிய செயல்களில் ஈடுபட்டு உழைக்க உந்து சக்தியான உதவக்கூடிய ஒரு பெண்ணைக் கண்டு கொண்டான்.; தான் தேடிய அந்தப் பெண்ணை தனக்குத் தெரிந்த அல்லது அறிந்த பெண்களை விடவும் பலவழிகளிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் கண்டுகொண்டான். அகத்தின் அழகை முகத்தில் காணும் சக்தி கொண்டவன். மேரியை அவன் தேடும் பெருந்தகைப் பெண்ணாகக் கண்டு கொண்டான்..
மேரி ஒரு சமூகசேவகியாய், தனது கணவன் கொள்கையில் வீறுநடை போட்டு வெற்றி வீரனாய் உலகில் உலாவர உழைக்கும் நல்லதொரு மனைவியாய், தான்பெற்ற பிள்ளைகளை சமூகசேவைகளில் ஈடுபடுத்தி, செயற்கரிய செயல்கள் பல செய்யப் பாடுபட்டு உழைக்கும் அன்புடன் கூடிய தாயாய், ஆதரவற்ற பெண்களினதும், பிள்ளைகளினதும் பாதுகாவலுக்கான அடைக்கலத் தாயாய், வலது குறைந்த பிள்ளைகளின் ஊன்று கோலாய், முதியோர்களுக்கு ஆதரவளிக்கும் அன்னையாய், செல்விருந்தோம்பி, வருவிருந்து காத்திருக்கும் இல்லத் ;தரசியாய், சிறப்பாகக் கூறின் இனியன பேசி, இனியன செய்து, யாவுமாகி எங்கும் நிறைந்து நிற்கும் பெரும் சக்தியாய்த் திகழும் ஒரு பெண்ணாகக்; கண்முன்னே கண்டுகொண்டான். இந்தக் ‘கனவு மெய்ப்பட வேண்டும’;. அப்படி மெயப்பட்டால் நான் பாக்கியசாலிதான். நல்ல எண்ணங்கள் மனிதவாழ்க்கையில் நிறைவேறும் வல்லமையுடையன.
“என்ன இன்னும் கொஞ்சம் தேனீர் தரட்டுமா?” குரல்கேட்டு மீண்டும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான். விழிகள் அவனையே நோக்கியிருந்தன. அவன் அந்தப் பார்வையில் சிக்குண்டுவிட்டான். “நன்றி. இப்போது வேண்டாம்.” அவன் சமாளித்தான். புகைவண்டி தடபுடத்து ஓடிக்கொண்டிருந்தது. பயணிகள் அதன் அசைவுக்கும், இரைச்சலுக்கும் ஏற்றவாறு தள்ளாடிக் கொண்டிருந்தனர். ஆனந்தன் மணிக்கூடு கட்டுவதில்லை. நேரத்தை எப்படி அறிவது? மேரியைப் பார்த்தான். அவனது செயலை அவனது பார்வை காட்டியது. “சரியாக நாலு மணி” சட்டென்று பதில் வந்தது. நான் நினைத்ததை இவள் எப்படிப் புரிந்து கொண்டாள். நன்றி கலந்த புன்னகையை வீசினான். அவள் அதனை பெற்று உள்ளத்தில் ஏற்றுக் கொண்டாள். “இப்போது கல்லோயாச் சந்தி வரும். எப்படியும் ஐந்து மணிக்குத்தான் கல்லோயாவில் இருந்து புறப்படும்.” சொல்லியவாறு யன்னலைத் திறந்து எட்டிப்பாரத்தான். கல்லோயாச் சந்தி நிலையம் தெரிந்தது. ஆனந்தன் சலித்துக் கொண்டான். வண்டி கிறீச்சிட்டு முன்னும் பின்னும் அசைந்து நின்றது.
“சரியாக ஐந்துமணிக்குப் புறப்படும்.” எழுந்து கைகால்களை அசைத்தான். வெளியில் இறங்கினால் நல்லது. இறங்கினான். பெரியவரும் எழுந்து நின்றார். இறங்கிப் பார்த்தால் என்ன? இறங்கினார். “அப்பா கவனம்.” மேரி தந்தையை எச்சரித்தாள். “நானும் வரட்டா அப்பா? சின்னவள் கேட்டாள். “சரி வா.” அழைத்தார். இறங்கினார்கள். “இவவின் பேரென்ன?” “எலிசபெத்” சின்னவள் தனது பெயரைச் சொன்னாள். “எலிசபெத்.. ரீ விருப்பமா? குடிப்பமா?” கேட்டான். “ஓம் குடிப்பமே..” பதில் வந்தது. “அக்காவிடம் பிளாஸ்கை வாங்கி வாங்கோ”. அதுக்குள்ள ரீ இல்லை. முடிஞ்சிட்டு” “அதுதான் வாங்கி வாங்க. நாங்க ரீ குடிச்சிட்டு அதற்குள் ரீ வாங்கிக் கொண்டு வருவம். சரியா”? எலிசபெத் ஓடினாள். “அக்கா பிளாஸ்கைத் தாங்க. ரீ வாங்கி வாறம்.” “அப்பா கேட்டாரா”? கேள்வி வந்தது. தயங்கினாள். என்ன சொல்வது. தீர்மானித்துவிட்டாள். “ஓமோம்” என்றாள். மேரி பெரிய பிளாஸ்க்கை எடுத்துக் கொடுத்தாள். எலிசபெத் பிளாஸ்க்கோடு வந்தாள். கன்ரீனை நோக்கி நடந்தார்கள். கன்ரின் பயணிகளால் நிறைந்து வழிந்தது.
பனி கொட்டிக் கொண்டிருந்தது. குளிர் சேர்ந்து உறைத்தது. புகைவண்டி. முன்னால் போவதும், பின்னால் நகர்வதுமாக இரைந்து கொண்டிருந்தது. மட்டக்களப்புக்கும் .திருகோணமலைக்கும் ஓரு புகையிரத வண்டிதான் உண்டு. திருகோணமலைப் பயணிகளுக்குச் சில பெட்டிகளும், மட்டக்களப்பிற்குச் சில பெட்டிகளும் இருக்கும். திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பிற்குச் செல்வதற்கு ஒரு பெட்டி கொழுவப்பட்டிருக்கும். மட்டக்களப்பிருந்து திருகோண மலைக்கு ஒரு பெட்டி போடப்பட்டிருக்கும். இவை இரண்டு பெட்டிகளும் கல்லோயா சந்திவரை சென்று தரித்து நிற்கும். கொழும்பிலிருந்து வரும் பகைவண்டி மட்டக்களபபு நோக்கிப் புறப்படும். அப்போது திருகோணமலையிலிருந்து வந்த பெட்டி அதில் கொழுவப்படும். அதோபோல் மட்டக்கப்பில் இருந்து வந்த பெட்டி திருகோணமலை என்ஜினோடு கொழுவப்படும். இந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இருக்கைகள் கிடையாது போகும். அப்போது வேறு பெட்டிகளில் பயணம் செய்வார்கள். கல்லோயாவில் இறங்கிவிடுவார்கள். கல்லோயாவில் பிரிந்து செல்லவிருக்கும் பயணிகள் இருக்கைகளைத் தேடிப்பிடிப்பதில் இறங்கினார்கள்.
தேநீரோடு சுடச்சுட அப்பமும் வாங்கினான். எலிசபெத்தின் கைகளில் அப்பத்தைக் கொடுத்தான். அவளுக்கு அது கனத்தது. பெரிய பார்சலாக இருந்தது. தான் பிளாஸ்கை எடுத்துக் கொண்டான். சனநெருக்கடி அதிகம். பெரியவரால் முண்டியடித்து முன்னேற முடியாதிருந்தது. ஆனந்தன் இளைஞன். அவன் புகுந்து விளையாடினான். பணத்தையும் அவனே கொடுத்தான். பெரியவர் பணத்தை நீட்டினார். பிறகு பார்க்கலாம் என்று மழுப்பி விட்டான். எலிசபெத் பார்சலோடு விரைந்து நடந்தாள். யன்னலூடாகப் பார்சலைக் கொடுத்தாள். “இது என்ன இவ்வளவு பெரிய பார்சல்.” மேரி வாங்கிக் கொண்டே கேட்டாள். அப்பாதான் வாங்கினார். எலிசபெத் வண்டியினுள் ஏறி இருக்கையில் இருந்தவாறே பதிலிறுத்தாள். “சுடச்சுட அப்பம். சாப்பிடுவோம்”. பெரியவரும் இருக்கையில் இருந்தவாறே கூறினார். “அப்பா முகம் கழுவாமல் சாப்பிடுவதா? எனக்கு வேணாம்.” மேரி பின்னிழுத்தாள். “வண்டி இப்போது புறப்படாது. அது புறப்பட நேரமிருக்கு. பக்கத்தில் பைப் இருக்கு. தண்ணீர் தாராளமாக வருது. இறங்கிக் கழுவுங்க. பிறகு சாப்பிடலாம்.” ஆனந்தன் ஆலோசனை வழங்கினான். அம்மா மார்க்கிரட் பிள்ளைகளோடு இறங்கினார். மேரியும் இறங்கிக் கொண்டாள். குழாயடிக்குப் போய் முகம் கழுவி வந்தார்கள்.
தொடரும்…

மங்கையராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா.
பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்
பாரில் அறங்கள் வளரும் அம்மா.

“எப்படிப் பொழுது போகிறது”?. ஆனந்தன் தொடர்ந்தான். “ “நமக்காகப் பொழுது ஒருநாளும் காத்திருக்காது. அது தானாகவே போகும். அதன் அசைவில்தான் உலகின் இயக்கம் இருக்கிறது.” ஒரு வேடிக்கைக்காகச் சொன்னாள். பின்னர் அவளே தொடர்ந்தாள். “வீட்டில் எனது பொழுது போக்கு தையல் தைப்பது. அருமையான, பயனுள்ள பொழுது போக்கு. அக்கம் பக்கமுள்ள ஏழைகள் தைப்பதற்கு வழியில்லாது தவிப்பார்கள். தைத்துக் கொடுப்பேன். அதற்கும் அம்மம்மா ஏசுவார்”.?
“ஏன்.”?
“காசு வாங்கித் தைத்துக் கொடு என்பார். நான் அதற்கு உடன்படுவதில்லை. அதனால்.” மெல்லென மின்னல் வெட்டியது போன்ற பிரமை. அவளது செவ்விதழகள்; அசைந்து மூடிக்கொண்டன. அதனை வெகுவாக இரசித்தான்.
“அவர் சொல்வதும் ஒருவகையில் சரிதானே”? ஆனந்தன் பதிலிறுத்தான்.

“அப்பா நான் உண்மையைத்தான் சொன்னேன்.”
“அதைத்தான் நானும் சொல்லுறன்.” அவர் சிரித்தவாறே சொன்னார். ஆனந்தன் தனக்குள் சிரித்துக் கொண்டான். புகைவண்டியின் இரைச்சல் செவிப்பறைகளை அதிரச் செய்தது. றெயிலின் கூவல் நீண்டொலித்தது. அவர்கள் கதைப்பதைக் காற்றும் இரைச்சலும் இழுத்துச் சென்றன. மேரி காதுகளில் கைகளை வைத்து அழுத்திப் பொத்திக் கொண்டாள். ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். பயணிகள் தம்மை மறந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சநேர அமைதி நிலவியது.
மேரியின் பதில்களும், சொல்லும் அழகும் ஆனந்தனை வசீகரித்தன. அவன் தன்னை மறந்து வேறு உலகத்தில் சஞ்சரித்தான்.

செவ்வாய், 27 ஏப்ரல், 2010
உன்னைப் பெற்றதால்…..
ஈச்சிலம்பற்று அழகான கிராமம். வரலாற்றுப் பெருமைமிக்க செம்பகவல்லி அம்மனின் கோயில் உள்ள கிராமம். உழைப்பால் உயர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். உள்ளத்தால் கோடீஸ்வரர்களாக விளங்கினார்கள். நல்லவர்களாகவும் வல்லவராகவும் வாழவேண்டும் என்ற உன்னைப். வெருகல் கங்கை பாய்ந்து வளம்கொடுக்கும். வயல்விளைந்து கிடக்கும். ஆநிரைகள் அசைபோட்டுப் பால் சொரியும். கிராம மக்களை நாட்டின் பிரச்சினை வாட்டியெடுத்தது. பலர் காணாமல் போனார்கள். எல்லோரும் அகதிகளானார்கள். தாயை அல்லது தந்தையை இழந்த சிறுவர்கள் ஏராளம். வறுமை தாண்டவாமாடியது. சிறுவர்களும் உழைக்க வேண்டியிருந்தது. கல்வியில் மேம்பட வேண்டும் கல்வியினால் வாழ்வு சிறக்கும். வாழ்க்கையில் உயரலாம். என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டது. அதிபரும் ஆசிரியர் சிலரும் பாடுபட்டார்கள். இரவு பகலாக உழைத்தார்கள். பாடசாலை எழுச்சி கொண்டது.
பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் வரவில்லை. இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டு அதிபர் பாடங்களை நடத்தினார். பல தொண்டு நிறுவனங்கள் உதவின. தொண்டர் ஆசிரியர்கள் கற்பிக்க முன்வந்தார்கள். அவர்களுக்குச் சிறுதொகை வேதனமாக வழங்கப்பட்டது. மாணவர்களது நன்மை கருதி ஒரு குடும்பத்துக்கு ஒரு சைக்கிள் வீதம் அதிபர் பெற்றுக் கொடுத்தார். அதிபர் தனது ஆசிரியர்களின் உதவியோடு பெற்றாரைக் கண்டார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பெற்றார்கள் விழித்துக் கொண்டார்கள். மாணவர்களுக்கு புத்திமதிகள் கூறினார். பழயமாணவர் சங்கத்தின் உதவியைப் பெற்றார். அவர்கள் பாடசாலைக்காக உழைத்தார்கள். பாடசாலை விழித்துக் கொண்டது.
நடேசன் பதினோராம் வகுப்பில் படிக்கிறான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா கமலம்தான் எல்லாம். தம்பி கணேசன் மட்டும் இருந்தான். கணேசன் ஏழாம் வகுப்பில் படிக்கிறான். மாதவனுக்கு அம்மா இல்லை. அவனுக்கு அப்பா மணியம்தான் எல்லாம். மாதவனும் நடேசனோடு பதினோராம் வகுப்பில் படிக்கிறான். மாதவனின் தம்பி நவநீதன் ஆறாம் வகுப்பில் படிக்கிறான். நன்றாகப் படிக்கக்கூடிய பிள்ளைகள். அவர்கள் ஒழுங்காகப் பாடசாலைக்கு வருவதில்லை. அவர்கள் வறுமைகாரணமாக உழைக்கவேண்டியிருந்தது. கமலத்தின் அண்ணன்தான் மணியம். தங்கைக்கு உதவியாக மணியம் இருந்தார்.
ஈச்சிலம்பற்றுக்கு வளமூட்டுவது வெருகல் கங்கைதான். கங்கை நீரைச் சுமந்து சலசலத்தோடும். வெருகலம்பதியானை அடியார்கள் வணங்கி அவன் கருணையைப் பெறுவார்கள். பண்டையப் பெருமைக்கும் தமிழர்களின் இருப்புக்கும் அடையாளம் அந்த வேல்முருகனின் கோயில். நீரின் சிலிர்பில் கரையோரத் தாவரங்கள் மதாளித்து மகிழும். வெருகல் கங்கை ஓரமாக வளமான நிலம் கிடந்தது. தண்ணீரை வேண்டியளவு வெருகல் கங்கை வழங்கியது. பம்பிகள் தேவைப்பட்டன. தொண்டு நிறுவனங்கள் அவற்றுக்கு உதவின. கங்கை ஓரம் தோட்டங்கள் பெருகின. மக்கள் ஆர்வமாகச் செயற்பட்டார்கள். மணியமும் கமலத்துக்கு சேர்ந்து தோட்டம் செய்தார்கள். இருவரது தோட்டங்களும் அருகிலேயே இருந்தன. அவர்களுக்குப் பொதுவாக பம்பி கொடுபட்டது.
நடேசனின் தாய் கமலம். தோட்டத்தில் தனியாகப் பாடுபடுவதைப் பிள்ளைகள் விரும்பவில்லை. அம்மாவோடு சேர்ந்து உழைப்பார்கள். தோட்டத்தில்தான் பொழுது போகும். பக்கத்தில் மாதவனின் தோட்டமும் இருந்தது. எல்லோரும் சேர்ந்து தோட்டத்தில் வேலை செய்வார்கள். பயிர்கள் செழித்துக் காய்க்கத் தொடங்கி விட்டன. அவற்றுக்குக் காவல் அவசியம். இரவில் தோட்டத்திலேயே தங்குவார்கள். தோட்டத்தில் ஒத்தாப்பு இருந்தது. அது காவலுக்கும், இளைப்பாறுவதற்குமாகக் கட்டபட்ட தற்காலிகச் சிறுகுடில். அரிக்கன் லாம்பு ஒத்தாப்பில் தொங்கும். வேலைகள் முடிந்ததும் இரவில் பாடங்களைப் படிப்பார்கள்.வெருகல் கங்கை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. பிரம்புப் புதர்கள் தொட்டம் தொட்டமாக ஆடிக்கொண்டிருந்தன. கங்கையின் குளிர்ந்த நீரை பம்பிகள் இறைத்துக் கொண்டிருந்தன. தண்ணீர் காய்கறித் தோட்டங்களைக் குளிப்பாட்டியது. பயிர்கள் சிரித்துக் காற்றில் ஆடின. கத்தரி, மிளகாய், வெண்டி, பூசணி, வெங்காயம் எனப் பயிர்கள் காய்த்துக் குலுங்கின.
கிராமத்துப் பண் காற்றில் தவழ்ந்து வந்தது. அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய வேலை. இன்னும் முடியவில்லை. அவசரமாகத் தோட்டத்தில் வேலைகளைச் செய்தார்கள்.“மாதவன்
நேரமென்ன”? நடேசன் சத்தமிட்டான். பம்பி இரைந்து கொண்டிருந்தது. “சரியாக ஏழு மணி. ஏழரைமணிக்குப் பாடசாலையில் நிற்க வேண்டும். வெளிக்கிடு போவம”;. மாதவன் சத்தமாகச் சொன்னான். தோட்டத்தை ஒருமுறை பார்த்தான். பூசணிக்காய்கள் கண்ணைக்கவர்ந்தன. கத்தரியும் கறிமிளகாயும் அவனைப் பார்த்துச் சிரித்தன. வழியில் சந்தை இருக்கிறது. கொடுத்துவிட்டுப் போகலாம். சிலவகைக் காய்கறிகளைப் பிடுங்கினார்கள். மாமா மூடையில் கட்டினார்.
செம்பகா மகாவித்தியாலயம் ஈச்சிலம்பற்றுக் கிராமத்தில் இருந்தது. தோட்டம் சுமார் ஏழு கிலோ மீற்றர் தொலைவில் இருந்தது. நிறுவனத்தின் மூலம் அதிபர் சைக்கிள் வழங்கியிருந்தார். நடேசனுக்கும், மாதவனுக்கும் ஆளுக்கொரு சைக்கிள் கிடைத்தது. “நீங்கள் பாடசாலைக்கு வருவதற்காகத்தான் இந்தச் சைக்கிள். ஒழுங்காக வந்து படித்து நல்லநிலைக்கு வரவேண்டும”;. அதிபர் அறிவுரை கூறிக்கொடுத்தார். அது பேருதவியாக இருந்தது. ஒரு சைக்கிளில் இருவர். ஒருவர் பெடலை மிதிப்பார் இன்னொருவர் சைக்கிள் பாரில் இருப்பார். கரியரில் காய்கறி மூடை ஒன்றிருக்கும். அவரது ஒருகால் பெடலில் இருக்கும். விரைந்து சைக்கிள் ஓடும். ஈச்சிலம் பற்றுச் சந்தையில் காய்கறி மூடைகள் இறக்கபடும். ஏழுமணிக்கு சைக்கிள்கள் இரண்டு பாடசாலை வளாகத்தினுள் புகுந்துவிடும். அவர்கள் போனதும் முதலாம் மணி ஒலிக்கும். பாடசாலைக்குப் பிந்தியது கிடையாது. வன்செயலின்போது அவர்களது வீடு அழிக்கப்பட்டுவிட்டது. நிறுவனம் தற்காலிகக் குடிலை அமைத்துக் கொடுத்திருந்தது. வீட்டில் ஆச்சியிருந்தார். பகலில் அவர் சமைப்பார். பாடசாலை விட்டதும் வீட்டுக்குப் போவார்கள். ஆச்சி சமைத்துவைத்திருக்கும் உணவை நால்வரும் உண்பார்கள். மாலைநேர வகுப்புகளுக்குத் தவறாது போவார்கள். வகுப்புக்கள் ஐந்தரை மணிவரை நடக்கும். அதிபர் வகுப்புக்களைச் சுற்றி வருவார். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள். வகுப்புக்கள் முடிந்ததும் தோட்டத்துக்குப் போய்விடுவார்கள்.
வழமைபோல் தோட்டத்திலிருந்து பாடசாலைக்குப் புறப்பட்டார்கள். வட்டவானைக் கடந்திருப்பார்கள். எங்கும் பதட்டமாக இருந்தது. வானம் இடிந்து வீழ்ந்ததுபோல் இருந்தது. ஆட்டிலறி ஷெல் சரமாரியாக வந்து வீழ்ந்து வெடித்தது. வீதியில் இருந்த கொங்கிறீற் பாலத்தினடியில் தஞ்சமானார்கள். அரைமணிநேரம் இடைவிடாது நிலம் அதிர்ந்து கொண்டிருந்தது. மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு வீதியால் ஓடிக் கொண்டிருந்தார்கள். “எங்கப்பா ஓடுவது? …ஓடியோடிக் களைச்சாச்சி. இனியும் ஓடேலாது.” முதியவர்கள் பலர் நடக்க இயலாமல் விழிபிதுங்க நின்றார்கள். “இப்படி நடக்குமென்று ஆருக்குத் தெரியும்? இதில இந்த மரத்துக்குக் கீழ் நிற்பம். நடக்கிறது நடக்கட்டும்.” அவர்கள் நின்றார்கள். சனங்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் போய்விட்டார்கள். ஆனால் இந்த முதியோர்கள் என்ன செய்வார்கள்?.
நடேசன் எட்டிப்பார்த்தான். இரண்டு மூன்று முதியோர்கள் வீதியில் வீழ்ந்து கிடந்தார்கள். என்ன செய்யலாம்? யோசித்தார்கள். அவர்கள் பகலில் உடுப்பதற்காக சாறன்கள் கொண்டுவருவது வழக்கம். “மாதவன், முதியோருக்கு உதவவேண்டும.; இதனை அதிபரும். ஆசிரியர்களும் சொல்லித் தந்தவர்கள். இப்ப என்ன செய்வம்.? நடேசன் ஆலோசனை கேட்டான். கணேசன் விவேகி. “அண்ணா எங்கட சாறன் இருக்கு. இப்ப நமக்குத் தேவை நாலு தடிகள்தான்”. சட்டெனக் கூறினான். நவநீதனின் கண்கள் பக்கத்து வயல்வேலியைப் பார்த்தன. உறுதியான கதியால்கள் தென்பட்டன. இருவரும் பாய்ந்தார்கள். நான்கு கதியால்கள் வந்தன. வெடிச்சத்தம் குறைந்திருந்தது. சாறங்களை எடுத்து விரித்தார்கள். அதற்குள் தடிகள் புகுந்தன. தற்காலிக கட்டில்கள் தயார். வெளியில் வந்தார்கள். முதியோர்கள் கிடந்த இடத்துக்கு ஒடினார்கள்.
இரண்டு பேராகச் சேர்ந்தார்கள். முதியவர்களைத் தற்காலிகக் கட்டிலில் வைத்தார்கள். தூக்கினார்கள். அத்தனை பேரையும் பாதுகாப்பாகப் பாலத்துக்குக் கீழ் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். சிலருக்குச் சிறிதான காயங்கள் இருந்தன. முதியவர் ஒருவர் நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். அவரைப்படுக்க வைத்தார்கள். இதயத்துடிப்பு நிற்பதற்கான அறிகுறி தென்பட்டது. நடேசன் அவரது நெஞ்சில் தனது கைகளைப் பதித்து முதற்சிகிச்சை அளித்தான். அது பலன்கொடுத்தது. பாடசாலையில் இந்தப் பயிற்சியினைப் பெற அதிபர் வசதிகள் செய்து கொடுத்திருந்தார். அப்பயிற்சி கைகொடுத்து உதவியது. அதிபரை நினைந்து கொண்டார்கள். ஷெல்சத்தங்கள் ஓய்ந்திருந்தன.
நடேசனும் நவநீதனும் சைக்கிள்களில் விரைந்தார்கள். இருவர் அவர்களுக்குத் துணையாக நின்றனர். சந்தியில் பிரதேசச் செயலாளரின் அலுவலகம் இருந்தது. சென்றார்கள். “ஷெல் அடிக்கிறாங்கள். என்னடா கண்டபடி சுத்துறீங்க”. பதட்டத்தோடு கூடியிருந்த பலர் அதட்டினார்கள். அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. நேரே பிரதேசச் செயலாளரிடம் சென்றார்கள். அவரிடம் நடந்ததைக் கூறினார்கள். அவர் ஆஸ்பத்திரிக்குக்கு முறையிட்டார். அம்புலனஸ் விரைந்தது. காயப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். மாணவர்களது செயற்திறன் ஊரெங்கும் பரவியது. அதிபர் மதிபாலர் மகிழ்ந்தார். மாணவர்களைப் பாராட்டினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் சேவை செய்யும் ஏதிலியர் நிறுவனம் உதவியது. மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை நடாத்த வழிசெய்தது. நடேசன் முன்மாதிரியாக இருந்தான். மாணவர்களை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டான். “நாம் மாணவர்கள். கஸ்டம் என்பது நமது உடன்பிறப்பு. அந்தக் கஸ்டத்தை நாம் வெல்லவேண்டும். படித்து நமது சமூகத்துக்குச் சேவைசெய்ய வேண்டும். நாம் நமது சகோதரர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். பாடங்களைக் கவனமாகப் படிப்போம். சித்தியடைவோம்”. திடசங்கற்பத்தோடு மற்றமாணவர்களை உற்சாகப்படுத்தினான்.
பரீட்சையும் விரைந்து வந்தது. பரீட்சைக்குப் போகும் மாணவரை அதிபர், ஆசிரியர்கள் நெறிப்படுத்தினார்கள். “வினாத்தாள்களை நன்கு வாசித்து விளங்கி விடையெழுதுங்கள். நீங்கள் அனைவரும் சித்தியடைவீர்கள். வாழ்த்தியனுப்பினார்கள். அதிபரின் அறிவுரையை நன்றாக விளங்கிக் கொண்டார்கள். பரீட்சையை நன்றாக எழுதினார்கள். பரீட்சை முடிந்ததும் தோட்டவேலையில் கவனம் செலுத்தினார்கள். மூன்று மாதங்கள் பறந்தோடின. பெறுபேறு வந்துவிட்டது. அதிபரும், ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். அவர்களது உழைப்பிற்கான அறுவடையை மாணவர்கள் பெற்றுக் கொடுத்துவிட்டார்கள். நடேசனும், மாதவனும் எல்லாப் பாடங்களிலும் ‘ஏ’ சித்தி பெற்றிருந்தனர். முப்பது பிள்ளைகளும் முழுமையான சித்தி பெற்று உயர்கல்வி பெறத்தகுதி பெற்றிருந்தார்கள்.
ஈச்சிலம்பற்று செம்பகா மகாவித்தியாலயம் நிலவொளியில் பளிச்சிட்டது. செம்பகா மகாவித்தியாலயம் தனது பவளவிழாவுக்காகத் தன்னை அலங்கரிப்பதில் மூழ்கிக் கிடந்தது. சில்லென்ற மெல்லிய காற்று உற்சாகத்தை விதைத்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் படு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதிபர் ஆசிரியர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தார். ஆசிரியர்கள் மாணவர்களுக்குரிய பொறுப்புக்களைக் கொடுத்திருந்தனர். பெற்றார் தம்பங்கினை உணர்ந்து செயற்பட்டார்கள். பெரியதொரு நிகழ்ச்சி நிரல் தயாரானது. ‘சித்தாள் வேலை எட்டாள் வேலைக்குச் சமனென்பார்கள்’. மாணவர்கள் படுகுஷியாக இருந்தனர். விடியவிடிய மக்கள் ஏதோவொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். குழுக்களாக இயங்கினர். பலருக்கு உறக்கமே வரவில்லை.
அதிகாலைப் பொழுது எட்டிப்பார்த்தது. மாவிலை தோரணங்கள் காற்றில் அசைந்து வரவேற்றன. மாணவர்களில் பலர் தலைமைத்துவப் பயிற்சி பெற்றிருந்தார்கள். தங்களது கடமைகளை நன்குணர்ந்து செயற்பட்டார்கள். விழுமியக் கல்வி கொழுந்து விட்டிருந்தது. காலையில் இருந்து பலவிதமான நிகழ்வுகள் நடைபெற்ற வண்ணமே இருந்தன. ‘பண்பாட்டைக் காப்பது மாணவர்களது கடமை’ என்பது மாணவர்களது உள்ளங்களில் ஓடியது. அதிபரும், ஆசிரியர்களும் இதற்காகப் பாடுபட்டனர். மாணவர்களையும், அதிபர் ஆசிரியர்களும் மகிழ்ந்து போனார்கள். கல்வித்திணக்களம் பாடசாலையைப் பாராட்டியது. பெற்றாரை உற்சாகப் படுத்தியது. மாணவர்களைப் பெருமைப்படுத்த முன்வந்தது. பெற்றாரோடு இணைந்து விழாவினை ஏற்பாடு செய்தது. விழா தொடங்கியது பெற்றார்களது வரிசையில் கமலமும், மணியமும் கண்கள் பனிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிபர் பெருமையோடு எழுந்தார். “வெட்டி வீழ்த்தப்பட்டாலும் எழுவோம். விழுவது எழுவதற்குத்தான். இதனை எனது மாணவர்கள் செயலில் நிலைநாட்டியுள்ளார்கள். இன்று கல்விப் பணிப்பாளர்களும், கல்விமான்களும் வருகை தந்துள்ளார்கள். உங்களைப் பாராட்டுவதற்காக. உங்கள் முயற்சி தொடரட்டும். மாணவர்களால் பாடசாலையும், கிராமமும் பெருமையடைகிறது”. அவர் மனதாரப் பாராட்டினார். கல்விப் பணிமனையினர் வாழ்த்திப் பரிசில்கள் கொடுத்தார்கள். பிரதேசச் செயலாளர் முதியவர்களைக் காத்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்தார். கமலமும், மணியமும் தங்கள் பிள்ளைகளின் செயலை எண்ணி மகிழ்ந்தார்கள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)