திங்கள், 27 அக்டோபர், 2008

அறிவுக் காட்சி

நீல வான வீதியைப் பார்
நிகழும் விந்தைக் கோலம் பார்
காலை நேரச் சூரியன்தான்
காட்டும் அழகு பார்தம்பி

சிவந்த சூரியக் கோளம்பார்
சூழும் மேகக் கூட்டம்பார்
கவரும் வண்ண உருவம்பார்
காணும் காட்சி அற்புதங்கள்.

கடலாய் வானம் விரிந்திருக்கும்
கப்பல் தீவுகள் வாகனங்கள்
படகுப் பல்வகைத் தொடரணிகள்
பாய்சுறா வாளை மீன்தெரியும்.

மாலை நேர வானைப்பார்
வண்ண நிலவின் ஒளியைப்பார்
கோலம் வானம் போடுவதைக்
காண நிலவில் பயணஞ்செய்.

கருத்துகள் இல்லை: